Engal Vazhnalellam எங்கள் வாழ்நாளெல்லாம் J446
களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால்
திருப்தியாக்குமய்யா
தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும்
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்
நீர்தானே நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே நீர்தானே
அடைக்கலம் நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர் தானே
எனது காப்பாளர் நீர் தானே
இறுதிவரைக்கும் நீர் தானே
உலகமே உருவாக்கப்படும் முன்னே
மலைகள் குன்றுகள் தோன்றுமுன்னே
எப்போதும் இருந்தவர் நீர் தானே
இன்றும் இருப்பவர் நீர் தானே
செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதித் திருச்சபை தோன்றச் செய்யும்
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Engal Vazhnalellam Lyrics in Thanglish
Engal vaalnaalellaam kalikoornthu makilnthida
Kaalaiyilae um kirupaiyinaal
Thirupthiyaakkumaiyaa
Theengu maerkonnda naatkalukkum
Thunpam kannda varudaththirkum – 2
Sariyaay intu makilachcheythu
Santhoshaththaalae nirappukireer
Neerthaanae neerthaanae en thanjam neerthaanae
Neerthaanae neerthaanae ataikkalam neerthaanae
En thanjam neerthaanae
Pukalidam neerae poomiyilae
Ataikkalam thanjam neerthaanae
Enathu kaappaalar neerthaanae
Iraுthivaraikkum neerthaanae
Ulakamae uruvaakkappadum munnae
Malaikal kuntukal thontum munnae
Eppothum irunthavar neerthaanae
Entum iruppavar neerthaanae
Seyyum seyalkal semmaippaduththum
Seyalkal anaiththilum vetti thaarum
Arputha ataiyaalam kaanach seyyum
Aathi thiruchSabai thontach seyyum
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
