Azhugaiyin Pallathaakkil அழுகையின் பள்ளத்தாக்கில்-J443



அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது – 2
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒருநாள் உம் சமூகம் மேலானது – 2
பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே – 2
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் – 2
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்

பூரிகை ஊதிடுவோம்


Poorigai oothiduvom
Lyrics in Thanglish 

Alukaiyin pallaththaakkil nadakkumpothellaam
Aanantha neerootu neerthaanaiyyaa
Apishaeka malaiyum neerthaanaiyyaa

Senaikalin karththaavae jeevanulla thaevanae
Um samookam evvalavu inpamaanathu – 2
Udalum ullamum kempeera saththaththodu
Paati paati thuthiththu makilkintathu

En thaevanae en raajanae
Uruva nadanthiduvaen nadanthu sentiduvaen
Umathu kanamalaiyaal thinamum nirampiduvaen

Vaeridaththil vaalkinta aayiram naatkal vida
Orunaal um samookam maelaanathu – 2
Pelaththinmael pelanatainthu Parisuththa vallamaiyaal
Nirainthu nirainthu nanti solvaen

Kathiravanum kaedakamum makimaiyum maenmaiyum
Ellaamae neerthaanae thakappan neerthaanae – 2
Nanmaiyaana eevukal naalthorum tharupavarae
Nampukinta manitharellaam paakkiyavaankal

Umathu aalayaththil umakkaay kaaththiruppor
Unnmaiyilae paakkiyavaan paakkiyavaankal – 2
Enna nadanthaalum eppothum thuthippaarkal
Thuthiyaal anuthinamum nirainthiruppaarkal

பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Sj.Berchmans Songs Volumes



அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள். 

பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்

பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.

ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே