Naan Padumbothu En Udhadu பாடும் போது என் உதடு-J440



நான் பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்-2

1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்-2
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக-2

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது

2.எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே-2
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்

3.(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்-2
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்

4.(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்-2
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்

5.(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே-2
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே-2-நாள்தோறும்

தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்

பூரிகை ஊதிடுவோம்


Naan Paadum Pothu en uthadu Lyrics in Thanglish 

Naan paadum pothu en uthadu
Kempeeriththu makilum
Neer meettuk konnda en aanmaa
Akkaliththu akamakilum-2

1.naan paaduvaen naan thuthippaen
Iravu pakal ennaeramum-2
Um thuthiyaal en naavu
Nirainthu iruppathaaka-2

Naalthoraுm ummai thuthippaen
Nampikkaiyodu thuthippaen-2-paadumpothu

2.eppothum naan thaedum
Kanmalai neer thaanae-2
Pukalidamum kaappakamum
Ellaam neerthaanae-2-naalthoraுm

3.(naan) karuvaraiyil irukkum pothu
Karththar ennai paraamariththeer-2
(oru) kuraivinti kulanthaiyaaka
Veliyae neer konnduvantheer-2-naalthoraுm

4.(en) ilamai muthal ithuvaraiyil
Neerae en ethirkaalam-2
Neer thaanae en thalaivar
Nnokkamum nampikkaiyum-2-naalthoraுm

5.(naan) muthirvayathu aanaalum
Thallividaathavarae-2
(en) pelan kunti pokum pothu
Kaividaathavarae-2-naalthoraுm

பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Sj.Berchmans Songs Volumes



அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள். 

பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்

பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.

ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே