Yesu Kristhuvin thiru raththamae இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே-J428
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2)
1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே
பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2)
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)
தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே
உறவாட செய்திடும் திரு ரத்தமே (2)
சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2)
சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2)
அளிக்க வந்தவன் தொடாதபடி (2)
காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே
புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2)
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2)
நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே - என்னை (2) -இயேசுவின் ரத்தம்
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Yesu Kristhuvin thiru raththamae Lyrics in Thanglish
Yesu Kristhuvin thiru raththamae
Enakkaay sinthappatta thiru raththamae (2)
Yesuvin raththam Yesuvin raththam
Enakkaay sinthappatta Yesuvin raththam (2)
1. Paava nivirththi seyyum thiru raththamae
Parinthu paesukinnda thiru raththamae (2)
Parisuththa samookam anuki sella (2)
Thairiyam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam
2. Oppuravu aakkidum thiru raththamae
Uravaada seythidum thiru raththamae (2)
Suththikarikkum valla thiru raththamae (2)
Sukam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam
3. Vaathai veettirkul varaathirukka
Thelikkappatta nalla thiru raththamae (2)
Alikka vanthavan thodaathapati (2)
Kaappaattina nalla thiru raththamae (2) -Yesuvin raththam
4.puthiya maarkkam thantha thiru raththamae
Puthu udanpatikkaiyin thiru raththamae (2)
Niththiya meetpu thantha thiru raththamae (2)
Neethimaanaay niraுththina thiru raththamae - ennai (2) -Yesuvin raththam
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
